ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரித்துள்ளது. அதுவேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,008,018 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டை கடந்தும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைர1 உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது உருமாறிய நிலையில் மீண்டும் மிரட்டி வருகிறது.  இதற்கிடையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 83,029,551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64,008,018 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 22 ஆயிரத்து 052 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,34,25,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,08,897 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக அமெரிக்காவில்,  2,24,56,902 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,32,59,949 பேர் குணமடடைந்து உள்ளனர். அதேவேளையில் உயிரிழப்பு   3,78,149, ஆக உயர்ந்துள்ளது.

பிரேசில் நாட்டில்  80,15,920, பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை  2,01,542 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் –  71,14,474 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,04,32,526 ஆக உள்ளது. இதுவரை உயிரிழப்பு  1,50,835 ஆக இருக்கும் நிலையில், இதுவரை குணமடைந்தோர்  எண்ணிக்கை 1,00,55,935 ஆக உயர்ந்துள்ளது.