சென்னை:

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4023 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,562  பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும்  நேற்று  1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து மண்டலவாரி நிலைப்பட்டிய வெளியிடப்பட்டு உள்ளது.

08.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 49.1% பேர் (11,265) குணமடைந்து உள்ளனர்; இறப்பு சதவிகிதம் 0.9% ஆக உள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23298 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11437 பேர். நோய் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11265. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் இதுவரை 2,068 பேருக்கும்,  தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.