ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.77 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை தாண்டி விட்டது.

இன்று (9ந்தேதி) காலை 7மணி நிலவரப்படி,  உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 2,77,22,014 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  9,00,876 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,98,08,414 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  9,00,876 ஆக அதிகரித்து உள்ளது.

உலகிலேயே கொரோனா பாதிப்பில் தொடர்ந்து  அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.  தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,514,231 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத் எண்ணிக்கை 194,032 ஆக உள்ளது.  இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 3,796,760 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,523,439 ஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.   இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,367,436 உள்ளது.  இதுவரை 73,923  பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை3,396,027 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 897,486 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ,165,124  ஆகவும்,  இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 127,517 ஆகவும் உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,397,234  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 640,373 ஆக உள்ளது.