டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. இதுவரை  தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43லட்சத்து 67ஆயிரத்து, 436 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பும் 74ஆயிரத்தை எட்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக தொற்று பாதிப்பு 90ஆயிரத்தைவிட அதிகமாக உள்ளது. கடந்த இரு நாட்களாக தினசரி  90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், நேற்று 89,852 பேருக்கு புத்தாக தொற்று  உறுதி செய்யப்பட்டள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 43,67,436 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 74,607  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை, குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33,96,027 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமட்டும் 1107 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  73,923 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 8,96,884  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.