09/11/2020 : சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  7,43,822 ஆக உயர்நதுள்ளது. இதுவரை  11,344 பேர் உயிழந்துள்ள நிலையில்,  7,13,584 பேர் குணம் அடைந்துள்ளனர் தற்போதைய நிலையில், 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று  601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதனால்,  சென்னையில் 2,04,862 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை  3,716 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 1,95,291 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போதைய நிலையில்  5,855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.