தொண்டர்கள், நிர்வாகிகள் என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டாம்: ஓபிஎஸ் திடீர் பேச்சு

தேனி:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும், என்னிடம் விசுவாசமாக இருக்கக் கூடாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் இலக்காக இருக்க வேண்டும். தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்.

தொண்டர்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் ஒரு போதும் எண்ணியதே  இல்லை. எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும்.  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக அமையும் என்று பேசினார்.