100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே:  இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில்,  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி தற்போது இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப்,  100 நாடுகளில் சப்ளை செய்யும் வகையில்  1.1 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை  வாங்கும் வகையில் சீரம் நிறுவனத்துடன்  நீண்டகால விநியோக ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது.

உலகளாவிய நோய்த்தடுப்பு பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் யுனிசெஃப்  -சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும்  அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளுக்கான நீண்டகால விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  இதுவரை தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் மிகப்பெரியது என்று  சீரம் நிறுவனம் விவரித்துள்ளது.

இதுகுறித்து கூறிய யுனிசெய் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் , “யுனிசெப், தனது கொள்முதல் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 100 குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர நாடுகளுக்கா உலக நாடுகளுக்காக 110 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் 3 டாலர் (சுமார் ரூ.225) விலைக்கு வாக்கப்படுகிறது.  இந்த வினியோக ஒப்பந்தம் முடிவு அடைந்துள்ளததாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படுட வரும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல நாடுகள் அணுகி வரும் நிலையில், யுனிசெஃப் 100 நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற சீரம் நிறுவனத்துடன் உடன்பாடு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.