வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களில் சுமார் 1.1 கோடி பேர் மோசமான வறுமையில் சிக்குவர் என்ற எச்சரிக்கை மணியை அடித்துள்ளது உலக வங்கி.

கொரோனா வைரஸ் பரவலால், அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது உலக வங்கி.

உலக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, பெரும் பாதிப்பையும் உண்டாக்கும். சீனா இதனால் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கு மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் வணிகம் முடங்கி உள்ளதால், நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். கிழக்கு ஆசியா, பசிபிக் பிராந்திய நாடுகளில், சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% குறையும். இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.