உலகளவில் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டதில் 33% இந்திய குழந்தைகள்!

உலக அளவில் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தசைச்சிதைவு நோயினால் கிட்டத்தட்ட 2 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

baby

ஆண்டுதோறும் உலகளவில் ஊட்டச்சத்து அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஊட்டச்சத்து அறிக்கைய வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலக அளவில் 5வயதிற்குட்பட்ட சுமார் 15.08 கோடி குழதைகள் வளர்ச்சி குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்தியாவில் மட்டும் 4.66கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் பார்க்க போனால் வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்தியாவை சார்ந்தவையாக உள்ளன. இந்தியாவை தவிர்த்து நைஜிரியாவில் 1.39 கோடி குழந்தைகளுக்கும், பாகிஸ்தானில் 10.7 கோடி குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த மூன்று நாடுகளில் மட்டுமே 47 சதவிகிதம் வளர்ச்சி குறைப்பாடு உள்ள குழந்தைகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தசைச்சிதைவு நோய்க்கு ஆளான குழந்தைகள் உலகளவில் 5.05 கோடி எனவும், இந்தியாவில் மட்டும் இந்த நோயினால் 2.55 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது. இதுமட்டுமின்றி சீனா, இந்தோனேஷியா, இந்தியா, எகிப்து, அமெரிக்கா, பிரேசில் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிப்படைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.