சென்னையில் 1.4 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

சென்னை:

மலேசியா தலைநகர் கோலாலம்பூர், கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து கடத்திவரப்பட்ட 1.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.

கோலாலம்பூரிலிருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரிடம் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 1,190 கிராம் தங்கமும், தோஹாவிலிருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அம்ரிபுனுல் என்பவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 225 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.