சபரிமலை போராட்டம் : 1,400 பேரை கைது செய்தது கேரள காவல்துறை

பரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று  போராட்டம் நடத்திய 1,400 பேரை கேரள காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சில பெண்கள் அங்கு சென்றனர். அவர்களை எதிர்த்து இந்து மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். பக்தர்கள் மீது கல் வீசித்தாக்கினர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி இயல்பு நிலை ஏற்படச் செய்தனர்.

தற்போது விவகாரம் தொடர்பாக கேரள காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை துவங்கியிருக்கிறது.

கடந்த புதன் கிழமை முதல் இதுவரை 1,400 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   இவர்களில் நிலக்கல், பம்பா மற்றும் சபரிமலையில் போராடியதாக கைது செய்யப்பட்ட 210 பேர் மீது 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இவர்களில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை  மாநில காவல் தலைமை அதிகாரி லோக்நாத் பெஹெரா, உறுதி செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “மாவட்ட தலைமை காவல் அதிகாரிகள் மூலம் இந்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டது.  பெண்கள் சிலரும்  கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். .

அவர்கள் மீது வன்முறையை தூண்டுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், மக்களை தாக்குதல், மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை கைது செய்வதற்காக திருவனந்தபுரம் தலைமை காவல் அலுவகலத்தின்கீழ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.