[embedyt] https://www.youtube.com/watch?v=WkW4_tkOgbo[/embedyt]

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘பட்டாஸ்’.

சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் .

விவேக்-மெர்வின் இசையில் சில் ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். பாடல் வரிகளை மெர்வின் சாலமன், விவேக் சிவா இணைந்து எழுதியுள்ளனர்.

சில் ப்ரோ பாடல் லிரிக்கில் வீடியோ வெளியானதில் இருந்து அதை இதுவரை 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டோர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். சில் ப்ரோ பாடல் கேட்க நன்றாக இருந்தாலும் சிலரை குத்திக் காட்டுவது போன்றும் உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.