கடந்த 4 மாதத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1.80 லட்சம் பிரசவங்கள்….

சென்னை:  தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.80ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
உலகளவில் பெருந்தொற்று பரவிய காலத்திலும், தமிழக அரசு, கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கு, தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில், அவசரகால மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில், மார்ச் முதல் இதுவரை, 5.9 கோடி நபர்கள் புற நோயாளிகளாக பயன் பெற்றுள்ளனர். 27.31 லட்சம் பேர், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கம் காலக்கட்டங்களில் மட்டும்  1 லட்சத்து, 80 ஆயிரத்து, 571 பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில்  பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அதில், ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் மட்டும், 1லட்சத்து, 29 ஆயிரத்து, 206 பிரசவங்கள் நடந்துள்ளன. ‘மேலும்  33 ஆயிரத்து, 374 பச்சிளம் குழந்தைகள் ‘மாநிலம் முழுவதும் பிறந்துள்ளன. இதன் காரணமகா பெண்களும், குழந்தைகளும்  சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றினால், தனியார் மருத்துவமனைகளை, நோயாளிகள் அணுக இயலவில்லை. அப்போது, தனியார் மருத்துவமனைகளின் சுமையையும், அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டன. இதனால், புறநோயாளிகள் மற்றும் பிரசவங் களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கார்ட்டூன் கேலரி