சென்னை:
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை ஓர் இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. தி.மு.க கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 6) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டிடும் வகையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.