டெல்லி: இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் வேலை வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒரு பங்கினர் விரும்பிய ஊதிய தொகுப்பு முதல் வேலை வாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கவலைப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. பிரிட்ஜ்லாப்ஸ் சொல்யூஷன்ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலளித்தவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய ஊதிய தொகுப்புடன் பணியில் உள்ளனர். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தல் செயல்முறைகளை நிறுத்திவிட்டன, பலரையும் பணிநீக்கி உள்ளன.

வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட இந்த ஆய்வில், பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 76 சதவீதம் பேர் தங்கள் கல்லூரிகளில் செயலில் வேலை வாய்ப்பு முகாம் இருப்பதை ஒப்புக் கொண்டனர்.

பெரும்பான்மையான மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் இருப்பதாக  கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டாலும், பதிலளித்தவர்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலானவர்கள் மட்டுமே அதன் மூலமாக ஒரு வேலையைப் பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

78.64 சதவீத மாணவர்களுக்கு தற்போது எந்த வேலையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வல்லுநர்கள் கூறி இருப்பதாவது:

கணக்கெடுப்பு பல சிந்தனை புள்ளிகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. முதலாவதாக, அனைத்து பொறியியல் பட்டதாரிகளும் தங்கள் கல்லூரிகளில் வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் தேர்வாவது இல்லை. 2வதாக, அத்தகைய விதிமுறைகளை அணுகுவது கூட ஒரு வேலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

இதற்கு இப்போது நிலவும் கொரோனா கால சூழ்நிலையும் ஒரு காரணம். கடைசியாக, வேலை தேடுபவர்களிடையே விரைவில் அவர்கள் விரும்பும் ஊதியத்துடன் வேலை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.