இந்திய – நேபாள எல்லையில் திடீர் துப்பாக்கிச்சூடு: இந்தியர் ஒருவர் பலி

பிலிபிட்: உத்தரப் பிரதேசத்தில் இந்தோ-நேபாள எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தையில் இருந்து திரும்பும்போது பப்பு சிங் மற்றும் குர்மீத் சிங் ஆகிய இருவருடன் அவர் எல்லைக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பிலிபிட் காவல் கண்காணிப்பாளர் ஜெய் பிரகாஷ் கூறியதாவது: நேபாளத்திற்குச் சென்ற 3 இந்தியர்கள், நேபாள காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அதில், ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  மற்றொருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார். மூன்றாவது நபரை காணவில்லை என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.