Random image

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: அணை நிரம்பி ததும்பும் வீடியோ….

மேட்டூர்:

ர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்த ஆண்டு மேட்டூர் அணை 2வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

இதன் காரணமாக அணையில் இருந்து  1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், எடப்பாடிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால்,  தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுரங்கம் வழியாக 25 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே, மேட்டூர் அணையில் கூடுதல் நீர் வெளியேற்றத்தால், காவிரி கரை யில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில், பொறையூர், ரெட்டியூர், கோலநாயக் கன்பட்டி ஆகிய ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளி யேற்றப்பட்டுள்ளனர்.

காவிரிக் கரையோரம் அமைந்துள்ள சாலைகளையும் தண்ணீர் ஆக்கிரமித்துள் ளது. இதனால், மேட்டூரில் இருந்து எடப்பாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளதுடன், தெற்கித்திக்காடு, பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் சாலையை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணைக்கு இந்த அளவுக்கு தண்ணீர் வருவதால், காலையிலேயே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அந்த பகுதிக்கு படையெடுத்துள்ளனர். 16 கண் மதகு பாலத்தின்மீது நின்று தண்ணீர் வெளியேற்றப்படுவதைப் பார்த்து ரசித்த அவர்களில் பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி ததும்பும் மற்றும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும்   வீடியோக்கள்….

https://youtu.be/QY6rO3wMAMA