விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும்  புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி களில் மதியம் 1 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடை பெற்று வருகிறது.  வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி அந்தத் தொகுதியில், 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில்  மதியம் 1 மணி நிலவரப்படி 54.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குனேரி தொகுதியில் மதியம் 1மணி நிலவரப்படி  41.35 சதவகிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் மதியம் 1மணி  அளவில் 42,71 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வரும் அதிமுக வேட்பாளர் நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த இடையூறும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி