10/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,08 கோடியாக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,08 கோடியாக  ஆக உயர்ந்துள்ளதுஇதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,55,280  ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதுதற்போது, நாடு முழுவதும் கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும  10 ஆயிரத்து 510பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஇதன் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,08,58,300   ஆக உயர்நதுள்ளது.

நேற்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  1,55,280  ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 699 பேர் குணமடைந்துள்ளார்.  இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  1 கோடியே 45லட்சத்து 59 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது.