சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும்,  5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 976 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதனால் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 25 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் பலி. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று உயிரிழந்தவர்களில் 80 பேர் அரசு மருத்துவமனையிலும், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,041-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 6037 பேர் குணமடைந்தனர். இதுவரை 2,44,675 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 80.80% பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 53,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டங்களில் சென்னை 976 , செங்கல்பட்டு 483 , திருவள்ளூர் 399 , காஞ்சிபுரம் 310 , கோவை 292 , கடலூர் 287 , தருமபுரி 18 , திண்டுக்கல் 173 ,

புதுக்கோட்டை 133 , கள்ளக்குறிச்சி 85 , கன்னியாகுமரி 205 , கரூர் 44 , கிருஷ்ணகிரி 58 , மதுரை 100 , நாகை 57 , நாமக்கல் 29 , நீலகிரி 7 , பெரம்பலூர் 35 , ஈரோடு 37 , ராமநாதபுரம் 35 , ராணிப்பேட்டை 184 ,

சேலம் 128 , சிவகங்கை 59 , தென்காசி 114 , தஞ்சாவூர் 123 , தேனி 357 , திருப்பத்தூர் 84 , திருவண்ணாமலை 154 , தூத்துக்குடி 196 , திருநேல்வேலி 83 , திருப்பூர் 48 , திருச்சி 56 , வேலூர் 189 , விழுப்புரம் 89 , விருதுநகர் 189 , பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.