10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,97,602  ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1,67,376 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தினசரி 6 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தினசரி ஆயிரத்துக்கும் குறைவான இருந்த பாதிப்பு, தற்போது 1200ஐ எட்டி உள்ளது. மேலும், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லாமல் இருந்த நிலை தற்போது மாறி வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரே குடியிருப்பில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு தெருவுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில், 1,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,67,376 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,52,846 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 3210  பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 11,.320 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 12,136 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.

மண்டலம் வாரியாக சிகிச்சை பெறுவோர் பட்டியல்:

கோடம்பாக்கம் – 1,263 பேர்

அண்ணா நகர் – 1,206 பேர்

தேனாம்பேட்டை – 1,103 பேர்

தண்டையார்பேட்டை – 784 பேர்

ராயபுரம் – 860 பேர்

அடையாறு- 991 பேர்

திரு.வி.க. நகர்- 886 பேர்

வளசரவாக்கம்- 848 பேர்

அம்பத்தூர்- 762 பேர்

திருவொற்றியூர்- 281 பேர்

மாதவரம்- 454 பேர்

ஆலந்தூர்- 595 பேர்

பெருங்குடி- 506 பேர்

சோழிங்கநல்லூர்- 339 பேர்

மணலியில் 237 பேரும்