10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாநிலத்திலேய அதிகபட்ச பாதிப்பு சென்னையில்  கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலை யில், சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் பட்டியலை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று  மட்டுமே 1,154 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,30,831 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில்,  10,854 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .

சென்னையில் நேற்றும் மட்டும் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,910 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.