சென்னை,

மிழகத்தில் நடைபெற இருக்கும் காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் 11வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில்,  10, 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன.

இந்த மூன்று வகுப்புகளுக்குரிய தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் இளங் கோவன் அனுப்பியுள்ளார்.

தேர்வு கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:–

10வது வகுப்பு தேர்வு விவரம்

செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ்முதல் தாள்.

12–ந் தேதி– தமிழ் 2–வது தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

15–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

18–ந் தேதி – கணிதம்.

20–ந் தேதி – அறிவியல்.

21–ந் தேதி – விருப்ப மொழிப்பாடம்.

23–ந் தேதி– சமூக அறிவியல்.

பிளஸ்-1 தேர்வு விவரம்

செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ் முதல் தாள்.

12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.

13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.

பிளஸ்–2 தேர்வு விவரம்

செப்டம்பர் 11–ந் தேதி –தமிழ் முதல் தாள்.

12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.

13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு.

18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், நர்சிங், அரசியல் அறிவியல்.

19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.

இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.