கர்நாடக சட்டமன்ற தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவிகித வாக்குப்பதிவு

பெங்களூரு:

ர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுடன் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி வரை 10.6 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 மணி நேரத்தில் 10 சதவிகித வாக்கு பதிவு ஆகி இருப்பது அரசியல் கட்சியினரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல வாக்குப்பதிவு தொடர்ந்தால், கர்நாடகாவில் முழுமையான அளவில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10.6% voting till 9 am in KarnatakaElections2018

 

கார்ட்டூன் கேலரி