சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை 39 பேருக்கு இருப்பது உறுதியான நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ் அச்சம் காரணமாக பல நாடுகளுக்கு செல்வதை மக்கள் விரும்பாத நிலையிலும், மத்தியஅரசும் பல நாடுகளுக்கு செல்லவேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தி வருவதாகலும் விமானங்களும் பயணிகள் இன்று வெறிச்சேரி கிடக்கின்றன.

இந்த நிலையில்  சென்னையில் இருந்து  குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் சுமார்  10 விமானங்கள் சேவை  ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும்,  குவைத்,ஹாங்காங், ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

அதுபோல வெளிநாடுகளில் இருந்து இந்தியா  வரும் விமானங்களின் சேவையும் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.