தமிழக சட்டசபைக்கு நாளை முதல் 10 நாட்கள் விடுமுறை

சென்னை:

மிழக சட்டசபை மானிய கூட்டத்தொடர் கடந்த  மாதம் 29ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை விடப்படுகிறது. அதையடுத்து சனி ஞாயிறும் விடுமறை. அத்துடன்  மேலும்  ஒரு வாரம் சட்டமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சட்டமன்றத்திற்கு 10 நாட்கள்  தொடர்ந்து விடுமுறை  ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மே மாதம் 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இதுவரை வனம், சுற்றுச்சூழல் துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மின்சாரம், மதுவிலக்கு, மீன், பால்வளம், கால்நடை, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சிறை, நீதி நிர்வாகம், சத்துணவு, மாற்றுத்திறனாளி, தொழில் துறை, சிறு-குறு தொழில், கைத்தறி, கதர் கிராம தொழில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

அதே வேளையில் தமிழக முதல்வர் எடப்பாடியும் தினசரி விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை சரமாரியாக அறிவித்து வருகிறார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சிகளும் பல்வேறு சமூக நல பிரச்சினைகளை எழுப்பி காரசார விவாதங்கள் செய்து வருகின்றனர்.

சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டம்தொடர் இன்று 13வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வருகிற 24ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

மீண்டும் சட்டசபை வரும்  25-ந்தேதி கூடுகிறது. அன்று  செய்தி, சுற்றுலா, காவல்துறை, தீயணைப்பு, வருவாய் துறை, சுற்றுசூழல், வணிகவரி, போக்குவரத்து, ஆதிதிராவிடர், தமிழ் வளர்ச்சி, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடர்  வருகிற ஜூலை 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.