சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்?

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஒரு வாரம் பரோல் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்ததால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பரன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பரோல் கோரி 10 நாட்களுக்கு முன் சசிகலா மனு அளித்துள்ளார்.

அதில், தனது தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்தின் திருமணத்திற்காக 10 நாட்கள் பரோல் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பரோல் கிடைக்கும் என  சிறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.