நாமகிரிப்பேட்டை:

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டத்தில்  கொல்லிமலைஅடிவாரத்தில் நாமகிரிப்பேட்டை இந்த பகுதியை சேர்ந்தசிலர் தங்களது தோட்டங்களில்  சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் எடுத்து முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆறு குளங்களில் மணல் எடுத்து விற்பனை செய்ய நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ள நிலையில், தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் இருந்து மணல் அண்டை மாநிலங்களுக்கும் செல்லாததால், கேரளா, கர்நாடகா விலும் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக  கட்டுமான பணிகளும் தொய்வடைந்து உள்ளன.

தற்போது மணலுக்கு மாற்றாக எம்–சாண்ட் பயன்படுத்துவது பற்றி அரசு வலியுறுத்தியது. பல இடங்களில் எம்–சாண்ட் உபயோகத்தில் இருந்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் போதிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதன் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்கிறது. அந்த மணலும் கட்டுமாண பணிக்கு தோதாக அமையாததால் திருட்டுத் தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து ஓறு, ஓடைகளில் மணல்கள் அள்ளப்பட்டு விட்ட நிலை யில், தற்போது ஆற்றங்கரையோரம்  அருகே உள்ள விவசாய நிலங்களிலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

காவிரிபாயும் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள  நாமகிரிப்பேட்டை அடுத்த காட்டூர் பகுதியில் ஓடை செல்லும் வழிதடங்களில் திருட்டுத்தனமாக  மணல் அள்ளி வருவது தொடர்ந்து வருகிறது. அதுபோல, அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு டிராக்டர் மணல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களது நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கி வருகின்றனர்.  ஒவ்வொருவர் தோட்டத்திலும் சுமார் 10அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.‘

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். மேலும் ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி, வேலம்பாளையம், ஒடுவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.