Random image

உச்சநீதிமன்றம் வழங்கிய 2018 ஆம் வருட பத்து முக்கிய தீர்ப்புக்கள் – 1 & 2

டில்லி

இந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய 10 முக்கிய தீர்ப்புக்களின் விவரங்கள் இதோ

சென்ற வருடம் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புக்கள் நாட்டில் பரபப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதில் 10 தீர்ப்புக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஆகும். அந்த தீர்ப்புக்களில் முதல் இரு தீர்ப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்

1. ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது இல்லை.

தனி மனித உரிமையின் அடிப்படையில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது இலை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் “ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் மற்றவர்களைப் போல் தனி மனித உரிமை உள்ளது. அவர்களின் உரிமைகளை மதிப்பதே உண்மையான மனிதாபிமானம் ஆகும். ஓரினச் சேர்க்கையை சட்டவிரோதமாக்கியது நாகரிகமற்றது” என கூறப்பட்டது.

இதற்கு நாடெங்கும் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இவ்வாறு ஓரின சேர்க்கை குற்ற விதியான 377 ஐ நீக்கியதால் சம உரிமை கிடைக்காது எனவும், அடிமட்டத்தில் இருந்தே சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் எனவும் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

2 திருமணத்தை மீறிய ஆண் பெண் உறவு குற்றமில்லை

இந்திய சட்டப்பிரிவு 487 இன் படி ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறி உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அவருடைய மனைவி அதற்காக அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழி செய்தது. உச்சநீதிமன்றம் இந்த் சட்டத்தை நீக்கி தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில் இந்த சட்டத்தின் மூலம் ஆண்கள் மட்டுமே தண்டனை பெற முடியும் என்பதால் இது பாலின பாகுபாட்டில் உண்டாக்கப்பட்ட சட்டம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஆண்களை தண்டனையில் இருந்து காக்க இந்த சட்டத்தை நீக்க உத்தரவிட்டுள்ள்தாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதுவும் நாட்டு மக்களிடையே கடும் சர்ச்சைய உண்டாக்கிய தீர்ப்பாகும்

அடுத்த இரு தீர்ப்புகளைப் பற்றி நாளை காண்போம்