சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை, 

சென்னை சென்ட்ரலில் ஹவுரா மெயில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் வந்த ஹவுரா மெயிலில் பொது பெட்டியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது கேட்பாராற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர்.

அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10 kg of cannabis confiscated in Chennai central railway station, சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
-=-