100 நாள் வேலைக்குச் சென்ற 10 தொழிலாளர்கள் பரிதாப பலி!

ஐதராபாத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் பணியாற்றிய 10 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெலுங்கானா மாநிலம் மரிக்கல் மண்டல் என்ற இடத்தில்.

இதுகுறித்து கூறப்படுவதாவது: தோண்டும் பணிக்காக அமர்த்தப்பட்ட ஒரே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் மேல் பெரியளவிலான மண் சரிந்து விழுந்தது. இந்த சம்பவம் காலை 11 மணிக்கு நடந்தது.

போலீஸ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

– மதுரை மாயாண்டி