10 லட்சம் பேர் ஆப்சென்ட்….தேர்வுகளை எளிமையாக்க உ.பி முதல்வர் ஆலோசனை

லக்னோ:

உ.பி. மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வின் போது காப்பி அடிப்பதையும், முறைகேட்டில் ஈடுபடுவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள் அதிமானோர் தேர்வுக்கு வரவில்லை என்று கூறப்பட்டது.

இது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,‘‘ தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

இதை இப்படியே விட்டுவிடமாட்டோம். தேர்வுகளை எளிமையாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்றார். மாணவ மாணவிகளுக்கு மோடி எழுதி வெளியிட்ட புத்தகத்தை யோகி ஆதித்யநாத் மாணவ மாணவிகள் மத்தியில் விநியோகம் செய்துள்ளார்.