டில்லி:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, சமூக வலைதளமான டிவிட்டரில் 1 கோடி (10மில்லியன்) பேர் ராகுலின் பதிவுகளை  எதிர்பார்த்து பின்தொடர்ந்து வருகிறார்கள். இது சாதனையாக கருதப்படுகிறது. அவர்களுக்கு ரால் நன்றி தெரிவித்து உள்ளார்.

தற்போது வயநாடு தொகுதி எம்பியான உள்ள ராகுல்காந்தி, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணைந்தார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். அதைத்தொடர்ந்து, அவரது சமூக வலைதள பக்கத்தை ஏராளமானோர் பின்தொடர்ந்து வந்தனர்.

ராகுலின் பதிவுகள், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் தொடர்பான அறிவிப்புகள், புகைப்படங் கள் டிவிட்டரில் பதிவிடப்பட்டு வந்த நிலையில், அது மக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக அவரது டிவிட்டர் சமுக வலைதள பக்கத்தை தொடர்ந்து வருபவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது, அவரது டிவிட்டர் பக்கத்தை 10 மில்லியன் பேர் அதாவது 1 கோடி பேர் தொடர்ந்த வருகிறார்கள். இதை ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதில், “உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். இச்சாதனையை அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.