சென்னை:

ள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை விடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் இனி ஒவ்வொரு பீரியட் (பாவேளை) முடிந்ததும்,  மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று கூறினார்.

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில்,   தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

விழாவில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசிய அமைச்சர்,  மாணவர்களின் நலன் கருதி பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு முன்னெடுத்து வரு கிறது. அந்த வகையில் இனி பள்ளி வேலை நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிடம் ஒதுக்கப்படும்.

ஏனெனில், போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதை தவிர்த்து மாணவர்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், கல்வி கற்கவும் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும். எதிர்கால தலைமுறைகளான மாணவர்கள், நாட்டின் வளர்ச் சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.