ஆந்திராவில் திருமண கோஷ்டியினர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 10 பேர் கதி என்ன?

--

விஜயவாடா:

ந்திராவின் கோதாவிரி ஆற்றில் திருமண கோஷ்டியினர் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்தவர்களில் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு என்ற இடத்துக்கு திருமண கோஷ்டியனர் சுமார் 40 பேர் ஒரு படகில் பயணம் மேற்கொண்டனர். அப்போது கடும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், படகு ஆற்றில் தத்தளித்தது. இதையடுத்து படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடடினயாக புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீசாரும், மீட்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில், படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

 

ஏற்கனவே கடந்த 11ந்தேதி இதுபோல கோதாவிரி ஆற்றில் சென்ற படகில் தீ பிடித்து பலர் இறந்தது குறிப்பிடத்தக்கது.