சென்னை.

லைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று அதிமுக அம்மா அணியில் உள்ள கோஷ்டிகள் சார்பாக தனித்தனியாக முதல்வரை சந்தித்து பேசினர்.

அமைச்சர்கள்   செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்டடோர் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்த படியாக எம்எல்ஏக்கள் குழு ஒன்று தனியாக சந்தித்து பேசியது.

இந்த நிலையில் இன்று காலை கருணாஸ் முதல்வரைஅவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்  10 எம்எல்ஏக்கள் திடீரென முதல்வர் எடப்பாடியை கோட்டையில் சந்தித்து பேசினார்.

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த இன்பதுரை, தென்னரசு, சந்திரசேகர், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.கள் தலைமைச் செயலகம் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவரு கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.