ஐதராபாத்:

த்தீஸ்கர் தெலுங்கானா மாநில எல்லைப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் 10 நக்சலைட்டுகளை  பாதுகாப்பு படையினர் சுட்டுகொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மற்றும் சத்தீஸ் மாநில எல்லை பகுதியான பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள செர்லா மண்டல் பகுயில் உள்ள பத்ராத்ரி கோதகுண்டம் என்ற தெலுங்கானா ஏரியாவில்  நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அந்த இடத்தை சுற்றி வளைத்த மத்திய பாதுகாப்பு படையினர், மாநில போலீசார், நக்சல்களை தேடும் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் குறைந்தது 10 நக்சலைட்டுக்கள் கொல்லப்பட்டதாக தெலங்கானா, சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் இந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும் , இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீசார் காயம் அடைந்ததாகவும் கூறி உள்ளனர். . மேலும் அந்த பகுதியில்  தேடுதல் வேட்டை  தொடர்ந்து  நடந்து வருகிறது என்றும்  கூறி உள்ளனர்