பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தாக்கும் கொரோனா வைரஸ் – இதுவரை 10 வீரர்களுக்கு பாசிடிவ்..!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தற்போது கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ளது. தற்போதுவரை, மொத்தம் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ‍நேற்றைய தினம் ஷதாப் கான், ஹாரிஸ் ராவுஃப் மற்றும் ஹைதர் அலி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினத்தில் மேலும் 7 வீரர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஃபக்கார் ஸமான், இம்ரான் கான், காஷிஃப் பாட்டி, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர்தான் அந்தப் புதிய எழுவர்.

பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதானது, அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed