கனடா நாட்டில் பாதசாரிகள் மீது வேன் தாக்குதல் : 10 பேர் மரணம்

டொரொண்டோ

னடாவில் உள்ள டொரொண்டோ நகரில் நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது வேன் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கனடாவின் டொரொண்டோ நகரில் உள்ளது யோங்கி சாலை.   நாள் முழுவதும் பரபரப்புடன் காணப்படும் சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.    இந்த சாலையில் நடைபாதை ஓரமாக வந்த ஒரு வேன் திடீரென நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது தேடித் தேடி மோதியது.

இந்த தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர்.  சுமார் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.   காயம் அடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டுள்ளனர்.   இந்த தாக்குதல் நடத்திய ஓட்டினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த ஓட்டுனர் பெயர் அலெக் மினாசென் என்பதைத் தவிர வேறு விவரம் எதையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

இந்த வேன் தாக்குதலில் மரணம் அடைந்தவர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.