ஐபிஎல் சூதாட்டம் 10 பேர் கைது

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்னோ சராய் பகுதியில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து எல்.இ.டி டிவி, 13 செல்போன்கள், ரூ.1.94 லட்ச ரொக்கம் கைப்பற்றப்பட்டது.