உலக சுகாதார நிறுவனம் கவலை : உலகில் விற்பனையாகும் மருந்துகளில் 10 சதவிகிதம் ‘ போலி ‘

உலகில் 10 சதவிகிதம் போலி மருந்துகள் விற்கப்படுவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிகளவிலான உரிமம் பெறாப்படாத மருந்துகள் சந்தையில் விற்பனையாகி வருவது ஆய்வில் தெரிவித்துள்ளது.

fake-drugs

சர்வதேச சுகாதார மையம் உலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்தின் தரத்தினை ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது உலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்துகளில் 10 சதவிகிதம் போலி என தெரிய வந்துள்ளது. சந்தையில் முறையாக உரிமம் பெறப்படாமல் சில மருந்துகள் விற்கப்படுவதாகவும் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனையாகிறதாக ஆய்வு கூறுகிறது. போலி மருந்துகளில் 50 சதவிகிதங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இருப்பது அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று. இதனுடன் விட்டமின் மருந்துகள் என்ற பெயரிலும் அங்கிகாரம் பெறாத மருந்துகள் விற்கப்படுகின்றன.

மருந்தகங்களிலும், மருத்துவமனைகளிலும் பெறப்படும் மருந்துகளின் தரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கையாக உள்ளது.