ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் பலி

காபூல்:

ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் பலியாயினர்.

ஆப்கானிஸ்தான் ஜலலாபாத்தில் கிராமப்புற மேம்பாடு அமைச்சக அலுவலகத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் பலியாயினர்.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அரசு ஊழியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த 2 வாரத்தில் நடந்த 3வது பெரிய தாக்குதலாகும்.