பாகிஸ்தான்: வேன் மீது லாரி மோதி 10 பேர் பலி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணம் அபோதாபாத் மாவட்டத்தில் சப்சி மந்தி மூர் என்ற பகுதியில் ஒரு வேன் இன்று மாலை சென்று கொண்டிருந்தது. இதில் 15-க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்த காயமமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.