சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் மத்திய அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத் தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. மேலும், இந்த  10% இட ஒதுக்கீடு யாருக்காக வழங்கப்படுகிறது? என  கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கெனவே எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், புதிதாக இட ஒதுக்கீடு யாருக்காக?  என்பது குறிது, மத்திய அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, இந்த புதிய சட்ட திருத்தம் பிப்ரவரி 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மோடி அரசின் இந்த புதிய 10% இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் மத்தியஅரசின் புதிய சட்ட மசோதாவை தடை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்,  திமுக அரசியல் நோக்கத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும், வழக்கில் ஆர்எஸ் பாரதி நேரடியாக பாதிக்கப்படவில்லை, என்பதால் அவரால் பொதுநல வழக்கு தொடர முடியாது” என்றும் கூறினார்.

இதற்கு திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் ஆட்சேகம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து  2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள  உயர் சாதியினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.