சென்னை

மிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டு அமல்படுத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தில் ஏற்கனவே 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளதால், மனுதாரரின்  மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்தியஅரசு புதிய சட்ட திருத்தத்தை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, மாநில அரசுகள்  உயர்கல்வி, வேலை வாய்ப்பில் 10% கூடுதல் இடஒதுக்கீடு முறையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்புபடி 50 சதவிகிதம் வரை மட்டுமே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். ஆனால், இன்று மத்தியஅரசு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து இடஒதுக்கீடு 60 சதவிகிதமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், தமிழகஅரசு  பதில் தெரிவிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  “தமிழகத்தை பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீடு என்பது, பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் அறிக்கையின் மூலமாக கணக்கெடுத்து அதன் அடிப்படையில் வழங்கப்பட்டு வரப்படு கிறது. இதனை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னிலையிலும் நிரூபித்து உறுதி செய்த பின்னர் தான் கடைபிடித்தும் வருகிறோம். அதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.