புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு! முதல்வர் தகவல்

புதுச்சேரி: தமிழகத்தைப்போல புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ள முதல்வர் நாராயணசாமி  தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,  புதுச்சேரி மாநிலத்திலும்  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,   தமிழகத்தில் 7.5 சதவிகித ஒதுக்கிடு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதுபோல, புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வகையில்   10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துயப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.