10 சதவிகித இடஒதுக்கீடு: பாராளுமன்ற மக்களவையில் மதியம் 2 மணிக்கு விவாதம்

டில்லி:

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கிய நிலையில், அது தொடர்பான திருத்த மசோதா குறித்து பாராளுமன்ற மக்களவையில் இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கும்  10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், பாராளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது.

இந்த மசோதாவில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின் 124வது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்துமக்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு  விவாதம் நடைபெற உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10 சதவிகித இடஒதுக்கீடு, 10% reservation, 10% இடஒதுக்கீடு, Cabinet approved, economically backward, economically backward upper castes, LS discussion at 2 PM, The Constitution (124th Amendment) Bill, upper castes, உயர் ஜாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், மத்திய அமைச்சரவை கூட்டம், மத்திய கேபினட் கூட்டம், ‘Reservation for Economically Weaker Section Bill’
-=-