Random image

உச்சநீதிமன்றம் வழங்கிய 2018 ஆம் வருட பத்து முக்கிய தீர்ப்புக்கள் – 9  அண்ட் 10

டில்லி

ந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய 10 முக்கிய தீர்ப்புக்களின் விவரங்கள் இதோ

சென்ற வருடம் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புக்கள் நாட்டில் பரபப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதில் 10 தீர்ப்புக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஆகும். அந்த தீர்ப்புக்களில் 7 மற்றும் 8 ஆம் தீர்ப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்

9. பசுமை பட்டாசு உத்தரவும் ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை உத்தரவும்

இந்தியத் தலைநகர் டில்லி உலகின் மிக மோசமான மாசடைந்த நகர் என கூறப்படுகிறது. அதனால் அங்குள்ள மக்கள் கடும் துயருற்று வருகின்றனர். எனவே டில்லி நகரில் காற்று மேலும் மாசடைவதை தடுக்க தீபாவளி சமயத்த்தில் ஃப்ளிப்கார்ட் அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பட்டாசு விற்பனையையும் உச்சநீதிமன்ற, தடை செய்தது.
அத்துடன் நகரில் கடைகள் மூலம் விற்கப்பட்ட பட்டாசுகளும் பசுமை பட்டாசுகளாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

10. கும்பலால் கொல்லப்படுவதை தடுப்பது மாநில அரசுகளின் பொறுப்பு

நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு கலவர கும்பலால் கொல்லப்படுவது அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப். முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரப்பபடும் பொய்ச் செய்திகள் எனவும் கூறப்பட்டது/ இதை ஒட்டி உச்சநீதிமன்றம் கும்பலால் நடத்தப்படும் கொலைகளை தடுப்பது மாநில அரசுகளின் பொறுப்பு எனவும் அதற்கேற்ப பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.