10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தடையில்லை… நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் மனு வாபஸ்.!

--

சென்னை:

10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தடை கேட்ட மனு நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் வாபஸ் பெறப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடை இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என நம்பப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி முதல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா   பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை இன்று  2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்?  என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா கூறினார்.

இதன் காரணமாக தமிழக்ததில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என நம்பப்படுகிறது.