பவானி ஆற்றில் வெள்ளம்…10 மாணவர்கள் சிக்கி தவிப்பு

கோவை:

கேரளா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணையிலிருந்து நீர் திறந்துவிட்டது. இதனால் நெல்லித்துறை வனப்பகுதிக்கு குளிக்கச்சென்ற 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திரும்ப முடியாமல் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.